வ.உ.சி நினைவு நாள் : மத்திய சிறை வளாகத்தில் மரியாதை

18 November 2020, 12:35 pm
Quick Share

கோவை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள அவர் எழுதியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது சிறை வளாகத்தில் இருந்தே அவர் செக்கிழுத்தார்.

அவரது 84 ஆவது நினைவு தினத்தையொட்டி கோவை மத்திய சிறையில் அவர் இழுத்த செக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.