பள்ளி மாணவியை நடுரோட்டில் கண்மூடித்தனமாக தாக்கிய வாலிபால் கோச்சர் : ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2024, 4:46 pm

தனியார் பள்ளி மாணவியை வாலிபால் கோச்சர் நடு ரோட்டில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது

ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடந்துள்ளது.

ஓசூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் இதில் பங்கு பெற்றுள்ளனர் அப்போது, ஓசூர் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த நேரத்தில் அந்த தனியார் பள்ளி ஆசிரியரின் கைக்கடிகாரத்தை பள்ளி மாணவி திருடியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: புகைகிறதா திமுக – சிபிஐஎம் கூட்டணி.. மீண்டும் சீண்டிய சு.வெ

இதனால் கோபமடைந்த அந்த ஆசிரியை அந்த மாணவியையும் அவர்களது பயிற்சியாளரையும் கடுமையாக திட்டி உள்ளார். அதற்கு பயிற்சியாளர் புதிய கைக்கடிகாரத்தை வாங்கி கொடுத்து விடுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் சமாதானம் ஆகாத அந்த ஆசிரியை தொடர்ந்து மாணவியை திட்டியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து பயிற்சியாளர் மாணவியின் தாயாரிடம் கூறி அவர் கூறியபடி மாணவியை தாக்கியுள்ளார்.

இந்த காட்சிகள் தற்போது வைரலாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மைதானத்தில் கீழே கிடந்த கைக்கடிகாரத்தை மாணவி எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது திருடியதாகவும் கூறப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!