கஞ்சா வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு: அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

10 June 2021, 10:54 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் கஞ்சா வியாபாரியை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஏர்போர்ட் பாரதி நகரை சேர்ந்தவர் அருண்(25) பைட்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் பாரதி நகர் பின்புறம் அருண் தலையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அருண் சுயநினைவின்றி இருப்பதால் அவரை வெட்டியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த முடியவில்லை. இந்நிலையில் நண்பர்களான பிரேம் ஜாகீர், முபாரக் ஆகியோருடன் பாரதி நகரின் பின் பகுதிக்கு அருண் சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அருணை வெட்டியவர்கள் யார்? வெட்டியதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 134

0

0