முன்னாள் முதலமைச்சர் கார் டயரில் சிக்கி தொண்டர் பலி… ஷாக் வீடியோ… ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2025, 2:08 pm

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தற்கொலை செய்த கட்சி நிர்வாகியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற தனது கான்வாயில் சென்றார்,.

இதையும் படியுங்க: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகர் கைது… தமிழ் திரையுலகம் ஷாக்..!!

அப்போது வழிநெடுக இருந்த தொண்டர்கள், ஜெகனை வரவேற்க காத்திருந்தனர். அவர் காரில் வந்ததும் மலரை தூவினர். அப்போது அவர் காரில் இருந்து இறங்கினார். அந்த சமயம் மலர் தூவ வந்த நிர்வாகி தவறி விழுந்து கார் டயரில் சிக்கி உயிரிழந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் டயரில் சிக்கியிருந்த நிர்வாகி செலி சிங்கையாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்

Volunteer dies after being trapped in Jagan Mohan's car.. Shocking video!

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிர்வாகி கார் டயரில் விழுந்து வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சிங்கையாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்.

இதனிடையே இது குறித்து விசாரணை நடத்திய ஆந்திர போலீசார், ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!