குக்கர் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க.. அண்ணாமலைக்கு சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட டிடிவி தினகரன்! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2024, 1:59 pm
TTV
Quick Share

குக்கர் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க.. அண்ணாமலைக்கு சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட டிடிவி தினகரன்! (வீடியோ)

கோவை மாவட்டம் சூலூரில் பாரதிய ஜனதா கட்சியின் கோவை வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

நேற்று இரவு ஏராளமான தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்பொழுது பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கூடியிருந்த தொண்டர்கள் ’தாமரை’ என குரல் எழுப்பவே, சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன், நேற்று முழுவதும் தேனியில் பிரச்சாரத்தில் இருந்ததால் அதே ஞாபகத்தில் பேசி விட்டேன் எனக்கூறினார்.

எப்பொழுதும் மிஸ் ஆகாது, நேற்றைய நியாபகத்தில் இருந்து விட்டேன் என தெரிவித்த அவர், “கூட்டணிக் கட்சிகள் தானே அதில் ஒன்றும் தவறு இல்லை” என்று சொல்லி சமாளித்தார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் தனது உரையை நிறைவு செய்யும் போது, ”கோயமுத்தூர் மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள், அவர்களுக்கு தெரியும், யார் பிரதமராக வரவேண்டும் என்று.

மோடி பிரதமராக வரவேண்டும் என நினைத்திருக்கிறார்கள். மோடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய அண்ணாமலையை வெற்றி செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல தீய சக்தியையும் துரோக சக்தியையும் “தாமரை வீழ்த்த” நீங்கள் துணை புரிய வேண்டும்” என்றார்.

அதன்பின்னர் சமாளித்துக் கொண்ட டிடிவி தினகரன், தாமரை வெற்றி பெற்றது என்ற செய்தி தமிழகம் முழுவதும் பறை சாற்ற வேண்டும் என பேசி சமாளித்தார்.

Views: - 127

0

0