ஊருக்கு மட்டும்தான் உபதேசமா? அலைமோதும் கூட்டம் : ஆட்சியர் அலுவலகம் என்றால் கொரோனா வராதா?

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2021, 5:45 pm
Cbe Coll Office -Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கடைபிடிக்கப்பட்ட நிலையில் கூட்டம் அலைமோதியது.

கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 கடந்துள்ளது. அவ்வப்போது இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி, ‘அட்வைஸ்’ செய்து வருகிறது.

ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே மக்கள் கூட்டம் முட்டி மோதி கூட்டம் சேர்க்கும் அவலம் கோவையில் நடைபெற்று வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தினங்களில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்றும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்த நாளில் மக்கள் தங்கள் ஊர், பகுதி குறைகளையும், தனிப்பட்ட குறைகளையும் ஆட்சியரிடம் மனுவாக வழங்குவர். இதனிடையே இன்று மனு அளிக்க வந்த மக்கள் பலரையும் ஒன்றாக ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதித்து கொரோனா பரவ வித்திட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.

இன்று பெருவாரியான மக்கள் பட்டா வேண்டி மனு அளிக்க வந்த சூழலில், அனைவரையும் ஒரே நேரத்தில் அனுமதித்தின் விளைவாக ஆட்சியர் அறையின் முன்பு மக்கள் கூட்டம் அலை மோதியது.

கொரோனா பரவலால் மக்கள் தனித்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்யும் மாவட்ட நிர்வாகமே இப்படி அலட்சியமாக இருப்பது மாவட்டத்தில் இன்னும் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

Views: - 179

0

0