நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2025, 6:59 pm
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: 7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!
போர் பதற்ற சூழலில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது, எவ்வாறு வெளியேற்றுவது, தாக்குதலில் இருந்து எப்படி தப்பித்து கொள்வது போன்ற ஒத்திகைகள் நடத்தப்படுகிறது.

இதற்காக கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களில் ஒத்திகை நடத்த மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. பாதுகாப்பு ஒத்திகை நிகழ்விற்காக ராணுவ டேங்குகள் லாரிகளின் மூலம் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்மிடிப்பூண்டி, எளாவூர் அதி நவீன சோதனை சாவடி வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
போர் பாதுகாப்பு ஒத்திகைக்காக ஆறு பீரங்கி வண்டிகள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு சென்றது#Trending | #IndianArmy | #tankers | #Pahalgam #PahalgamTerroristAttack | #IndiaPakistanWar | #viralvideo pic.twitter.com/bsZQIstN4Z
— UpdateNews360Tamil (@updatenewstamil) May 6, 2025
அவ்வழியாக செல்லும் வாகனங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சோதனை மேற்கொண்டு அணுப்பி வைக்கின்றனர். ஆறு பீரங்கி வண்டிகள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு செல்கின்றது.
