பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்? பங்க் ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் : வட்டாட்சியர் நேரில் ஆய்வு!!

22 July 2021, 4:47 pm
Water In Petrol -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் பெட்ரோல் ப‌ங்கில் பெட்ரோலில் த‌ண்ணீர் க‌ல‌ப்ப‌ட‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌தாக‌ கூறி பொதும‌க்க‌ள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உய‌ர்ந்து வ‌ருகிற‌து. இந்நிலையில் திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானலில் செவ‌ண்ரோடு ப‌குதியில் பெட்ரோல் ப‌ங்கில் பொதும‌க்க‌ள் அன்றாட தேவைகளுக்காக தங்கள் வாக‌ன‌ங்க‌ளுக்கு பெட்ரோல் ம‌ற்றும் டீச‌ல் நிர‌ப்பி வ‌ருகின்ற‌ன‌ர்.

தொட‌ர்ந்து இன்று சில‌ர் வாகனத்திற்கு பெட்ரோல் வாங்கி சென்று ஊற்றும் போது த‌ண்ணீர் க‌ல‌ந்திருப்பதாக‌ தெரிய‌ வ‌ந்த‌து. இத‌னை க‌ண்டு அதிர்ச்சி அடைந்த‌ அவ‌ர்க‌ள் பெட்ரோல் நிலைய‌த்திற்கு வ‌ந்து அங்கிருந்த‌ ப‌ணியாள‌ர்க‌ளிடையே வாக்குவாத‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.

இதனை அறிந்த வ‌ட்டாசிய‌ர் ச‌ந்திர‌ன் ச‌ம்ப‌வ‌ இடத்திற்கு வ‌ந்து விசார‌ணை மேற்கொண்டார். இது குறித்து ஆய்வகத்திற்கு பெட்ரோலை அனுப்ப உள்ளதாக கூறிய அவர், பெட்ரோல் நிலைய‌த்திற்கு எச்ச‌ரிக்கையும் விடுத்துள்ளார்.

Views: - 112

0

0