பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை: அணைகள் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு..!!

By: S
10 January 2021, 9:31 pm
burgoor dam - updatenews360
Quick Share

அந்தியூர்: பர்கூர் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மேகமூட்டமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிழக்கு மலைப்பகுதியான தாமரைகரை, தேவர்மலை, ஈரட்டி, பெஜிலெட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதேபோல் வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் பலத்த மழை கொட்டியது.

இதனால் 30.5 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து, தற்போது 31.5 அடியாக உள்ளது. தாமரைகரை பகுதியில் உள்ள கசிவுநீர் மற்றும் வனக்குட்டைகளிலும், கோவிலூரில் ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வனக்குட்டைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால், வனவிலங்குகளுக்கு போதுமான நீர் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து நேற்று காலை முதலே பர்கூர் மலைப்பகுதி வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

Views: - 51

0

0