தேர்தலில் திமுகவின் தில்லு முல்லு குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளோம் : சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2022, 1:34 pm
Eps Byte -Updatenews360
Quick Share

திருவள்ளூர் : ஆளும் கட்சியாக மாறினாலே திமுக அராஜகம் செய்யும் என்றும் வாக்கு இயந்திரத்தில் உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றது குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக சிறையில் உள்ள ஜெயக்குமாரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சென்னை புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சிறையில் எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி பெஞ்சமின் உள்ளிட்டோர் அவரை சிறையில் சந்தித்தனர்…

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பெண் என்று பாராமல் சட்டசபையில் அராஜகம் செய்தது ஆளும் கட்சியாக இருந்த திமுக.

அவர்கள் ஆளுங்கட்சியாக வந்தால் இது போன்று தான் செய்வார்கள் என்றும் வாக்கு இயந்திரத்தில் உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றது குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும், எதிர்க்கட்சியினை நசுக்குவதாகவும், தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாக உள்ளது என குற்றம்சாட்டினார்.

பின்னர் காவல்துறையும் ஏவல் துறையாக மாறியுள்ளது என்று கூறிய அவர், தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாக உள்ளது என்றும் நாங்கள் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சிகளை எப்படி நடத்தினோம் என்பதை உணரவேண்டும் என கூறினார்.

ரவுடிகளையும் குண்டர்களையும் தேர்தலில் கைது செய்யாமல் அவர்களை ஏவியதால் இதுபோன்ற பிரச்சனைகள் நிலவியதாகவும் திமுக 9 மாத கால ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தில் உள்ளாட்சி தேர்தலில் கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

கள்ள ஓட்டு போட முயன்றவர் பல்வேறு குற்றங்களில் குண்டர் சட்டத்தில் சிறை சென்று ஜாமீனில் வந்துள்ள நபர் அவரை கைது செய்யாமல் ஜனநாயக கடமையாற்றி கள்ள ஓட்டை தடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர் என தெரிவித்தார்.

Views: - 357

0

0