குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை : தூய்மை பணியாளர்கள் ஆதங்கத்துடன் போராட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan30 April 2025, 2:30 pm
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா இந்த அரசுஎன ஏங்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களின் போராட்டம் கோவை மாநகராட்சியின் முன்பு முற்றுகை போராட்டமாக நடந்து வருகிறது.
இதையும் படியுங்க: அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?
அவர்களின் கோரிக்கையை என்னதான் இது குறித்து துணை பணியாளர்கள் கூறுகையில் காலம் காலமாய் நாங்கள் நடத்துகின்ற இந்தப் போராட்டம் என்பது ஏதோ எங்களுக்கான போராட்டமாக கருதக்கூடாது.

வளரும் சமுதாயத்தின் பொது சுகாதாரத்தை பாதுகாக்கின்ற போர் வீரர்களாக நாங்கள் இருக்கின்றோம். எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு நாங்கள் போராடுகின்றோம்.

இதில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். அதே நேரத்தில் அரசு நிர்வாகம் தூய்மை பணியாளர்களின் துயரங்களைக் கேட்டு சரி செய்து கொடுக்க வேண்டும். தேர்தல் காலத்திலே ஆளுகின்ற அரசு தூய்மை பணியாளர்களுக்கான தேவையான அனைத்தையும் செய்து தருவதாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர வேண்டும்.

ஒப்பந்த முறையில் நடக்கின்ற முறைகேடுகளை கலைந்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவர்கள் மீது எடுக்கவும் அவர்களுக்கு உடந்தே ஆக இருக்கின்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்ப போராட்டத்தில் நாங்கள் முன்வைக்கின்றோம் என தெரிவித்தனர்.
