அரசுப் பள்ளியை சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2022, 5:23 pm
Anbil Mahesh - Updatenews360
Quick Share

அரசுப் பள்ளியைச் சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்.

தனியார் கல்வி நிறுவனத்தின் பொன் விழா நிகழ்வில் கலந்து கொண்ட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப் பள்ளியைச் சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என மேடையில் பேசும்போது தெரிவித்தார்.

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரி வளாகத்தில் ரத்தினம் கல்வி நிறுவனங்களின் 50-வது ஆண்டு பொன் விழா நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் கோவை மாவட்டத்திலிருந்து உருவான 10 பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், கல்வித்துறையில் சமச்சீர் துவங்கி பல்வேறு முன்னெடுப்புகளை தற்போதைய அரசு எடுத்து வருகிறது.

பள்ளிக்கல்வி துவங்கி உயர் கல்வி வரை வளர்ச்சிக்கான ஏற்பாடுகளை தற்போதைய அரசு செய்து வருகிறது. தற்போதைய இளைஞர்கள் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படும் விதத்தில் உருவாகி வருகிறார்கள்.

இளைஞர்களின் படிப்பிற்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவதுதான் திராவிட மாடல் சித்தாந்தம். உங்களுக்கான முதலமைச்சராக தற்போதைய முதல்வர் இருக்கிறார்.

அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளமாய் திகழ்ந்து வருகிறது. இந்த நிகழ்வில் தனியார் பள்ளியின் சிபிஎஸ்சி பாடத்தை பற்றி குறிப்பிட்ட அமைச்சர், அரசு பள்ளிகளை சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என பெருமிதத்துடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 314

0

0