திமுக அரசின் மிரட்டலுக்கு பயப்படவோ அடிபணியவோ மாட்டோம் : டிட்டோ-ஜாக் ஆசிரியர்கள் சங்கம் உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 செப்டம்பர் 2024, 2:00 மணி
Tito Jac
Quick Share

ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக அரசு தனது கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல் படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தராததை கண்டித்து இன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தையும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருவள்ளூரில் தமிழ்நாடு தொடக்கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சார்பாக ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர் இராதாஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஆசிரியர்களை வைத்து ஆசிரியர்களின் கண்ணில் குத்துவார்கள், பிரித்தாலும் சக்தியை அரசுகள் எப்பொழுதும் செய்வதுதான் அவர்களுடைய வேலையை அவர்கள் செய்கின்றனர்.

எங்கள் வேலையை நாங்கள் செய்கிறோம். எங்களின் கோரிக்கைக்கு அரசு விரைவில் இசைவு தெரிவிக்கும் வகையில் எங்களின் போராட்டம் நிச்சயம் இருக்கும்.

அரசின் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம், அரசாணை 243 திரும்ப வரும் வரை ஓய மாட்டோம் என டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் இராதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாணை 243 ரத்து செய்ய கோரி டிட்டோஜாக் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் செப்டம்பர் 29 30 அக்டோபர் 1 ஆகிய மூன்று நாளும் தலைமைச் செயலாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 165

    0

    0