இனி ரயில் நிலையங்களில் மாஸ்க் கட்டாயம்: இல்லைனா ரூ.500 அபராதம்…அதிரடி அறிவிப்பு..!!

17 April 2021, 5:00 pm
railway stration - updatenews360
Quick Share

சென்னை: ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,23,354 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,71,220 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 16,79,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 11,99,37,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டு, மீறுவோர்களிடம் அனைத்து மாநிலங்களிலும் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், முக கவசம் அணியாமல் நடமாடினால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல ரயில்வேகளுக்கும் மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் முக கவசம் தவறாமல் அணிந்து செல்ல வேண்டும் என்று ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

Views: - 72

0

0