குடியை கெடுத்த குடிகார நண்பர்கள்… பாதியில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2025, 11:24 am

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த காந்திகுப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிய கூடிய காவேரிப்பட்டிணம் அருகே உள்ள பனகமுட்லு கிராமத்தை இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் காவேரிப்பட்டிணம் சேலம் சாலையில் உள்ள எஸ்.எம். கல்யானி திருமண மண்டபத்தில் கடந்த 27ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்திற்கு முதல் நாள் (26ம் தேதி) மாலை அந்த மண்டபத்தில திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வந்தனர். இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் மணமகனின் நண்பர்கள் சிலர் மது போதையில் மண்டபத்திற்கு வந்து நடனம் ஆடினார்கள்.

மேலும் மேடையில் மாப்பிள்ளையை நடனம் ஆட சொன்னார்கள். சிறிது நேரத்தில் மணப்பெண்ணையும் நடனமாடுமாறு கூறினார்கள். அந்த நேரம் மணப்பெண் இது போன்று நடனமாடுவதில் எனக்கு விருப்பம் இல்லை என கூறினார்.

Wedding stopped by drunk friends.. Bride leaves

மேலும் பெண்ணின் உறவினர்களும் இது போல எங்கள் வீட்டு பெண்ணை நடனமாட சொல்வது தவறு என்றனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு பெண் வீட்டாரை மணமகனுடன் வந்த சிலர் தாக்கினார்கள்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணப்பெண் திருமணத்திற்கு முன்பே இப்படி நடந்து கொள்கிறார்களே, இவரை திருமணம் செய்து கொண்டால் எனது வாழ்க்கை என்ன ஆகும் என கூறினார்.

இதையடுத்து அந்த நபரை திருமணம் செய்து கொள்ள பெண் மறுத்தார். இதனால் வரவேற்புடன் திருமணம் நின்றது. மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள் போன்றவை அவசர, அவசரமாக இரவோடு இரவாக அகற்றப்பட்டு விட்டன. மேலும் மணமகன், மணமகள் வீட்டாரும் ஊருக்கு திரும்பினார்கள்.

இதனிடையே காலை திருமணத்திற்கு வந்த பலரும் மண்டபத்திற்கு சென்றார்கள். காலையில் மண்டபம் பூட்டப்பட்டிருந்த தகவல் அறிந்து கேட்ட போது, வரவேற்பில் ஏற்பட்ட பிரச்சினையில் திருமணம் நின்றதை அறிந்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!