தவெகவில் முதலில் காலியாகும் முக்கியப்புள்ளி? விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி!

Author: Hariharasudhan
10 February 2025, 5:56 pm

சென்னை: தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அதற்கான தீவிர செயலில் தவெகவினர் இறங்கி உள்ளனர். இதன்படி, கட்சிகளை வலுப்படுத்தும் வகையில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளை 120 கட்சி மாவட்டங்களாக பிரித்து, அதற்கான மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.

அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து பிரிந்து வந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பதவியை விஜய் வழங்கினார். அப்போதே கட்சியில் சில சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தவெக தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமியும் இருக்கும் நிலையில், வாய்ஸ் ஆஃப் காமன் என்ற தேர்தல் வியூக அமைப்பை வைத்து நடத்தும் ஆதவ் அர்ஜூனாவுக்கு, தவெகவில் பொறுப்பு கொடுத்தது ஏன் என்றும், ஜான் ஆரோக்கியசாமிக்கு ஏதேனும் இடையூறை ஏற்படுத்துமா என்றும் கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வெளியாகி, தவெகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், அந்த ஆடியோவில், கட்சியின் அனைத்து தருணங்களிலும், நிகழ்வுகளிலும் புஸ்ஸி ஆனந்தே (பொதுச் செயலாளர்) முன்னிலைப்படுத்தப்படுகிறார் என்றும், அவர் தான் தன்னை தலைவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்றும், சாதி பார்த்து நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் புஸ்ஸி ஆனந்த் ஈடுபடுகிறார் என்றும், சிலரிடம் பணம் வாங்கியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

விஜய் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக பார்க்கப்படும் புஸ்ஸி ஆனந்த் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ஜான் ஆரோக்கியசாமி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், புஸ்ஸி ஆனந்திற்கு, ஜான் ஆரோக்கியசாமி மீது சாடல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், புதிதாக கட்சிக்குள் வந்த ஆதவ் அர்ஜூனாவிற்கும், புஸ்ஸி ஆனந்திற்கும் நல்ல ஒரு நட்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

TVK Vijay

இந்த நிலையில்தான், தேர்தல் வியூகங்களில் மோடி, ஜெகன் மோகன் ரெட்டி, ஸ்டாலின் என பலருக்கும் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த கிஷோரை, இன்று தனது வீட்டில் விஜய் சந்தித்து உள்ளார். இதற்கு முக்கிய காரணமே ஆதவ் அர்ஜூனாவின் ஏற்பாடுதான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கோயில் முன்பு கொடூரம்.. மதுரையில் அடுத்தடுத்து பரபரப்பு!

இதனால், தற்போதைய கட்சியின் வியூக வகுப்பாளராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமிக்கு மாற்றாக பிரசாந்த் கிசோரை களமிறக்க திட்டம் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவிகின்றன. மேலும், ஜான் ஆரோக்கியசாமியை, ஆதவ் அவரது பாணியிலே, திட்டம் போட்டு தூக்க திட்டமிட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில், பிரசாந்த கிஷோர் இடையிலான சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இந்த சந்திப்பின் போது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களும் இருந்திருக்கின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!