திருச்சி விமான நிலையத்தில் குழந்தைகளுடன் வந்த தம்பதி செய்த காரியம்.. சுங்கத்துறை அதிகாரிகள் ஷாக்!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2023, 10:35 am

திருச்சி விமான நிலையத்தில் குழந்தைகளுடன் வந்த தம்பதி செய்த காரியம்.. சுங்கத்துறை அதிகாரிகள் ஷாக்!!!

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதை கண்ட அதிகாரிகள் அவரை தனித்து விசாரணை மேற்கொண்டு சோதனை செய்தபோது அவர் தனது மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த 61லட்சத்து 21ஆயிரத்து 500 மதிப்புள்ள 1கிலோ 60கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அந்த விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணிகளான கணவன், மனைவி இரண்டு குழந்தைகளை சோதனை மேற்கொண்ட போது அந்த தம்பதியினர் தங்கள் குழந்தைகளின் ஷு மற்றும் உள்ளாடையில் தங்கத்தை நூதன முறையில் மறைத்து ரூபாய் 1கோடியே 8 லட்சத்து 10 ஆயிரத்து 800 மதிப்புள்ள 1 கிலோ 872கிராம் தங்கத்தை கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

தொடர்ந்து அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் மொத்தம் ரூபாய் 1கோடியே 69லட்சத்தி 32ஆயிரத்து 300 மதிப்புள்ள 2கிலோ 932 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் இவர்கள் யாருக்கா கடத்தினர்? வெளிநாட்டிலிருந்து இவர்களுக்கு கொடுத்து அனுப்பியது யார்? என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!