திருச்செந்தூர் கடலில் குளிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து? பக்தர்கள் பரபரப்பு புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2025, 6:06 pm

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படியுங்க: பாமகவில் நடப்பது தந்தை மகன் பிரச்சனை.. கூட்டணி கட்சி என்பதால்.. வானதி சீனிவாசன் நெத்தியடி!

மேலும் திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவிலுக்கு வரும் தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமியை வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடலில் பக்தர்கள் நீராடி கொண்டிருந்த போது உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு அரிப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல் கை, கால் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் கூறினர்.

இதையடுத்து கடற்கரை பகுதியில் ஆய்வு செய்த பணியாளர்கள் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதை பார்த்துள்ளனர். இந்த ஜெல்லி மீன்களால் உடலில் அரிப்பு ஏற்படுவதோடு தோல் நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

What danger awaits those bathing in the sea at Tiruchendur? Devotees complain

இதைத் தொடர்ந்து ஜெல்லி மீன்களால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் கோவிலில் உள்ள மருத்துவமுகாமில் முதலுதவி சிகிச்சை பெற்று சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

இதுகுறித்து உரிய ஆய்வு செய்து ஜெல்லி மீன்களால் பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!