ரசிகர்களிடம் பணத்தை பிடுங்கியதை தவிர விஜய் வேறு என்ன செய்துள்ளார்.. ஹெச் ராஜா விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2025, 5:32 pm

திருநெல்​வேலி​யில் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் பங்கேற்பதற்காக பஜக மூத்த தலைவர் எச். ராஜா சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.

அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் அனாவசியமாக பாஜகவை பற்றி பேசியிருக்கின்றார். இது அவதூறு பிரச்சாரம், ராமாயணத்தில் ராமன் என் பக்கம் இருக்கிறான் என்று சொல்லும் போது சுக்கிரீயன் வாலியை சண்டைக்கு வா என்று கூப்பிடுவான்.,

இவருக்கு பின்னாடி யார் இருக்கிறார் என்று தெரியவில்லை. விஜய் தமிழக பாலிடிக்ஸ் படிக்க வேண்டும் படித்துவிட்டு கருத்து சொல்ல வேண்டும். 1974 அன்று மூ. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் கட்சத் தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டது.

தற்போது இவை மீட்க வேண்டும் என்றால் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை. லட்சத்தீவு நம் கையில் இருந்த போது திமுக, காங்கிரஸ் கொடுத்துவிட்டது. அதனை வாங்க வேண்டும் என்றால் இலங்கையோடு பேச வேண்டும். எடுத்தோம் கவுத்தோம் என்று பேச முடியாது.

நடிகர் விஜய் தமிழகத்தில் இருக்கின்ற ரசிகர்களிடம் புடிங்கிய பணத்தைத் தவிர இவர் வேறு என்ன செய்துள்ளார். 2014ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிதி கொடுத்ததைவிட மூன்று மடங்கு தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தெரியாமல் படிக்காமல் ஏதோ பாஜக கொள்கை ரீதியாக எதிரி என்கின்றார்

உங்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது. வெறும் மைனராட்டி பாலிடிக்ஸ் வைத்து மத பின்னணியில் மிஷனரி ஆதரவோடு அனாவசியமாக பாஜகவை பற்றி பேசக்கூடாது என்றார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!