பழனி கோவில் கருவறைக்குள் பிரமுகர்களுக்கு என்ன வேலை? சந்தேகத்தை கிளப்பிய இந்து தமிழர் கட்சி பிரமுகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2023, 7:08 pm
Palani - Updatenews360
Quick Share

பழனி திருக்கோவிலில் ஆகமத்திற்கு விரோதமாக கும்பாபிஷேகம் நடத்தாமல் வம்பாபிஷேகம் நடத்தியுள்ளனர் என இந்து தமிழர் கட்சியின் மாநில தலைவர்.ராம ரவி குமார் ஜி கூறியுள்ளார்.

இந்து தமிழர் கட்சியின் மாநாடு மற்றும் இந்து தமிழர் கட்சியின் இணைப்பு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இருளப்பபுரத்தில் நடந்தது.

இதில் சாதுக்கள், சன்னியாசிகள், மடாதிபதிகள், சிவனடியார்கள் மற்றும் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர்.ராம ரவிக்குமார் ஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது “பழனி கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி தமிழக அறநிலையத்துறை அமைச்சர் உட்பட பலர் ஆகம விதிகளை மீறி கருவறைக்குள் சென்று உள்ளனர்.

இது ஆன்மீகத்துக்கு நல்லதல்ல. கோவில் கருவறைக்குள் பூஜையில் ஈடுபடுபவர்களை தவிர வேறு யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை அப்படி இருக்கும்போது அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் பல முக்கிய பிரமுகர்களுக்கு கருவறைக்குள் என்ன வேலை என்ற கேள்வி எழுகிறது.

நவபாசான சிலை எந்த அளவில் உள்ளது என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் இந்துக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே கருவறைக்குள் சென்றவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதோடு பழனி முருகனின் நவபாஷாண சிலை என்ன நிலையில் உள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அறநிலையத்துறை ஊழல் பெருச்சாளிகள் நிறைந்ததாக மாறிவிட்டது என அவர் கூறினார்.

Views: - 387

0

0