தொட்டதெல்லாம் துலங்குமா? ரிஷப ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்? குருபெயர்ச்சி பலன்களை தெரிஞ்சுக்கோங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2023, 2:55 pm

குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ரண ருண ரோக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

வெள்ளை மனம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் மனதில் போட்டு வைத்திருந்த திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்கு பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சினைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.

அரசியல்வாதிகளின் பெயர், புகழுக்கு களங்கங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களே வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அனுகூலம் ஏற்பட்டு மனநிம்மதி உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் போட்டிகள் அதிகரித்து உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பிறகலைஞர்கள் தட்டிச் செல்வார்கள். வரவேண்டிய பணத்தொகையும் தாமதப்படும். புதிய வாய்ப்புகள் தடைப்படுவதால், தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பரிகாரம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்குவதால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!