அண்ணாமலை நினைப்பதெல்லாம் தமிழகத்தில் நடக்காது.. அவர் ஒரு ஜோக்கர் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2023, 12:19 pm

புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலாரின் 200 ஆம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு ஆன்மீகப் பணியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வள்ளலார் வழியில் நடந்து வரும் ஆன்மீக பெருமக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன மேலும் பல்வேறு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பரிசுகளை வழங்கினார்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, அண்ணாமலை எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. அவரை நாங்கள் ஒரு ஜோக்கராக தான் பார்க்கிறோம்.

அண்ணாமலை கூறுவது போன்று தமிழகத்தில் வரும் காலங்களில் ரணகளம் ஆவதற்கு வாய்ப்பே கிடையாது. வேறு மாநிலத்தில் வேண்டுமானால் ரணகளம் ஆகலாம் தமிழகத்தில் அது நடக்காது. தமிழகம் ஒரு அமைதியான பூமி.

சிறைகளில் உள்ள பெண் கைதிகள் தங்களுடைய குடும்பத்தினரிடம் பேசுவதற்கு வீடியோ காலிங் வசதி நேற்று முதல் புழல் சிறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தமிழக முழுவதும் உள்ள சிறைகளில் விரைவில் அமல்படுத்தப்படும்
இதனால் பெண் கைதிகள் தங்கள் குடும்பத்தினரும் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் மன அழுத்தம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

சிறையில் உள்ள தவறுகளை கண்டுபிடிப்பதற்கு சிறையில் பணியாற்றும் காவலர்கள் தங்களுடைய உடைகளில் கேமராக்களைப் பறித்துக் கொண்டு செல்வதால் தடுக்கப்படும் இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் சென்னையில் தலைமை வலத்தில் இருந்து கண்காணிக்கும் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைதிகளிடம் கொரோனா பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை சிறைத்துறை எடுத்து வருகிறது அவர்கள் சிறைக்கு வரும்போது கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் சிறை கொள்ளும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு கொரோனா பரவல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர் சீர்திருத்த பள்ளி மட்டும் சிறுவர் கூர்நோக்க பள்ளிகளில் சிறுவர்கள் தப்பிக்காமல் இருப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் சிறை துறை காவல் துறையினரின் சட்டைகளில் பொருத்தப்பட்டுள்ளது இதன் மூலம் சிறுவர்கள் தப்பிப்பது கட்டுப்படுத்தப்படும் அதையும் மீறி தப்பித்தாலும் உடனடியாக அவர்கள் மீண்டும் கைது செய்யப்படுகிறார்கள்.

  • enforcement department charges against the actors who acting in online rummy app நான் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கவில்லை- அமலாக்கத்துறை வழக்கில் பிரகாஷ் ராஜ் புது விளக்கம்?