ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் பாஜக முழு மனதுடன் வரவேற்கும்: எல்.முருகன்…!!

1 December 2020, 8:47 am
Murugan Attack Kanimozhi -Updatenews360
Quick Share

சென்னை: ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் முழு மனதுடன் வரவேற்போம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வேல் யாத்திரையை தொடங்க முடியாததால் ரத்து செய்தோம். மீண்டும் 4ம் தேதி முதல் வேல் யாத்திரையை தொடங்கி, 7ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்ய உள்ளோம்,

ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆன்மிகவாதி. தேசபக்தர். ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் பா.ஜ.க. அதை முழு மனதுடன் வரவேற்கும். சட்டசபையில் இந்த முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நிச்சயமாக இருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலில் தாமரை மலர்ந்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கட்சி தலைமைதான் முறையாக அறிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வேளாண் சட்டத்துக்கு தமிழக விவசாயிகள் மிகப்பெரிய வரவேற்பை தந்து உள்ளனர். வேளாண் சட்டத்தை வைத்து தி.மு.க. பெரிய அளவில் பிரச்சினை செய்ய முயற்சித்தது. ஆனால் பாதுகாப்பான சட்டம் என்று விவசாயிகள் நினைப்பதால் எதிர்கட்சிகளின் பொய் பிரசாரம் முறியடிக்கப்பட்டதாக எல்.முருகன் கூறியுள்ளார்.

Views: - 12

0

0