பெட்ரோல், டீசல் விலை எப்போ குறைப்பீங்க? மாட்டுவண்டியை ஓட்டி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2024, 4:29 pm

பெட்ரோல், டீசல் விலை எப்போ குறைப்பீங்க? மாட்டுவண்டியை ஓட்டி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!!

வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் மும்முறமாகவும் வெவ்வேறு விதமாகவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில், திருவெண்ணைநல்லூர் ஒன்றியம், டி.புதுப்பாளையம் கிராமத்தில், அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து காணப்படுவதை உணர்த்தும் விதமாக புதுப்பாளையம் கிராமம் முழுவதும் மாட்டு வண்டியில் சென்றும் மாட்டு வண்டியை ஓட்டியும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர், டி.புதுப்பாளையம், எடையார், எடப்பாளையம், சின்னசெவலை உள்ளிட்ட 30- க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளருக்கு அதிமுக நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்தும் மலர் தூவியும் பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • Priyanka Deshpande cried Vijay TV Fame Shared கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!