இ-பதிவில் ‘திருமணம் பிரிவு‘ இருக்குதா.. இல்லையா..: அடுத்தடுத்த அறிவிப்புகளால் குழப்பம்!!

18 May 2021, 6:37 pm
E Pass - Updatenews360
Quick Share

தமிழகத்தில் இ-பதிவு பெறுவதற்கான காரணங்களின் பட்டியலில் இருந்து திருமணம் என்ற பிரிவு மீண்டும் நீக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பயணம் செய்வதற்கு இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது. உரிய ஆவணங்களுடன் திருமணத்திற்காக பயணிக்க விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இ-பதிவு முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக விணப்பித்ததால் அவசர காரணங்களுக்கான பட்டியலில் இருந்து திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டது. திருமணம் என கூறி ஏராளமானோர் பழைய பத்திரிகைகளை போலீசாரிடம் காட்டிய சம்பவமும் அரங்கேறியது.

இந்த நிலையில் பொதுமக்களிடம் அதிக அளவு கோரிக்கை வந்ததை அடுத்து மீண்டும் திருமண அனுமதி பிரிவு சேர்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.

இனிமேல் திருமணம் என்ற காரணத் கூறி மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் மக்கள் பயணிக்க இயலாது. நேற்று நீக்கம், காலையில் சேர்ப்பு , மீண்டும் நீக்கம் என அடுத்தடுத்து மாறுப்பட்ட அறிவிப்புகள் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Views: - 155

0

0