நள்ளிரவில் சாலையை கடந்த வெள்ளை உருவம் : விழுப்புரம் அருகே திகில் சம்பவம்!!

23 February 2021, 1:41 pm
Ghost Video - Updatenews360
Quick Share

விழுப்புரம் : மரக்காணத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் நடந்து செல்வதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏராளமான அமானுஷ்ய கட்டுக்கதைகள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றன. இறந்தவர்கள் பேயாக உலா வருவதாகவும், அவர்கள் மற்றொருவரும் உடலில் புகுந்து தொந்தரவு கொடுப்பதாகவும் வைரல் வீடியோக்கள் பகிரப்படுகின்றன.

திகிலூட்டும் ஹாலிவுட் ஹாரர் திரைப்படங்கள் அமானுஷ்ய கட்டுக்கதைகளை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. எனினும், பேய் என்ற ஒன்று இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கு என்றும் விடை கிடைத்ததில்லை.

அறிவியல் அமானுஷ்யம் இல்லை என்றபோதிலும் எங்கோ ஓரிடத்தில் கண்ணிற்கு புலப்படாத சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதேபோன்ற ஒரு சம்பவம் தான் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மரக்காணத்தில் இருந்து தீர்த்தவாரி கடற்கரை பகுதிக்கு செல்லும் வழியில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது.

இரவு நேரத்தில் அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சிலர், வெள்ளை நிற உடையில் அமானுஷ்ய உருவம் ஒன்று நடந்து செல்வதை பார்த்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் அந்த அமானுஷ்ய உருவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

30 விநாடிகள் வரை எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் வெள்ளை உருவம் நடந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மரக்காணம் பகுதி மக்கள் இரவு நேரத்தில் பேய் உலவுவதாக அச்சம் தெரிவித்து வருகின்றனர். பேய் உலவுவதாக பகிரப்படும் இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Views: - 6

0

0