இன்று வெளியாகிறது தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை : முக்கியத்துவம் என்ன?
Author: Udayachandran RadhaKrishnan9 August 2021, 8:33 am
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடுகிறார்.
தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைப்பெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரையின் போது நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை இன்று காலை 11.30 மணிக்கு தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். அதன்படி,பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெள்ளை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடவுள்ளார்.
அதிமுகவின் கடந்த 10 வருட ஆட்சிக்காலத்தில் அரசின் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக ,கடந்த 2001 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சி.பொன்னையன்,நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
*வெள்ளை அறிக்கையின் முக்கியத்துவம் என்ன?
*ஒரு அரசின் வெள்ளை அறிக்கை என்பது அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஆகும்
*புள்ளி விபரங்களுடன் வெளிப்படைத்தன்மை
*அரசின் திட்டங்கள் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இருக்கும்
*வெள்ளை அறிக்கையின் மீது மக்களே கேள்விகளை எழுப்பலாம், விவாதம் நடத்தலாம்
0
0