ஆட்சி அமைப்பது யார்? நடிகர் ராகவா லாரன்ஸ் சொன்ன பதில்.. கேள்வி மேல் கேள்வி கேட்டதால் மழுப்பல்!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2024, 10:25 am

மாற்றம் சேவை அமைப்பு மூலமாக நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.. அந்த வகையில் இன்று வியாசர்பாடி எஸ்.எம். நகர் மைதானத்தில் வடசென்னை பகுதிகளில் உள்ள கால்பந்து வீரர்களுக்கு 100 கிட்டுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

கால்பந்தாட்டா வீரர்களுக்கு கிட்களை ராகவா லாரண்ஸ் வழங்கினார். இதற்கிடையே ராகவா லாரண்ஸிடம் புகைப்படம் எடுத்த இளைஞர்களின் கூட்டமும், ஆட்டோ வழங்கி உதவி புரிந்த அந்த பெண்களின் கூட்டமும், மனு கொடுக்க வந்த கூட்டமும் ராகவா லாரன்ஸை நெரித்தது..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது,

போதைக்கு இளைஞர்கள் சிலர் அடிமையாகி இருப்பதாகவும், விளையாட்டினை ஊக்குவிக்க வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் இங்கு வந்ததாகவும், பல பேர் ஷூ இல்லாமல் விளையாடுவதை கண்டு மனம் வருந்தியதாகவும், இதனால் 100 கால்பந்து வீரர்களுக்கு கிட்களை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

வடசென்னையில் விளையாட கிரவுண்ட் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறிய கேள்விக்கு, நிறைய பேரு விளையாட்டு பத்தி தான் மனு அளித்திருப்பதாகவும், அதை படித்து விட்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

மதர் தெர்சா, வாழும் தெய்வம் என பல பெயர்களை வைத்து கூப்பிடுகிறார்கள்,அதை மனதில் வைத்து கொள்வேன் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன்…

செல்லும் இடங்களிலெல்லாம் அரசியலுக்காகவா இது என கேள்வி கேட்கிறார்கள், தான் சேவைக்காக செல்கிற இடம் எல்லாம் கோவில் என்று நினைக்கிறேன், திருப்பதிக்கு சென்று உண்டியலுக்கு பணம் போடுவது போல தான் இந்த கோவிலுக்கு சென்று உதவி செய்கிறேன் அவ்வளவு தான்..

அடுத்ததாக விதவை பெண்களுக்கு 500 தையல் மிஷின் கொடுத்த திட்டம்..

பள்ளி மாணவர்களின் பைகளிலே போதை பொருள் இருப்பதை கண்டதாகவும், விளையாட்டினை ஊக்குவிக்க வேண்டும் எனக்கூறி அழைத்ததினால் இங்கு வந்ததாகவும், உடலை தான் ஆரோக்கியமாக வைத்திருக்க காரணம் டான்ஸ் தான் அதை போல இளைஞர்களும் போதை பொருள் போன்றவற்றை விட்டு விளையாட்டில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..

தமிழகத்தில் போதை பொருள் அதிகம் உலாவுவதாக சொல்கிறார்கள், விரைவில் சரியாகி விடும் என மற்றவர்களை போல் தானும் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

ஜூன் 4 ஆம் தேதி ஜெயிக்க போறவங்களுக்கு வாழ்த்துகள், தோற்பவர்களுக்கு அடுத்த முறை ஜெயிக்க வாழ்த்துகள் என மழுப்பலாகவும், அரசியல் சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என கூறினார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?