கொண்டையை மறைந்த இரானி கொள்ளையர்கள்.. விமானத்துக்குள்ளே சென்று கைது.. செயின் பறிப்பு அரெஸ்ட் பின்னணி!

Author: Hariharasudhan
26 March 2025, 12:04 pm

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: சென்னையின் அடையாறு, வேளச்சேரி, சாஸ்திரி நகர் மற்றும் சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில், ஒரே நாளில் 7 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், இதில் தொடர்புடைய மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபர், சூரஜ் ஆகிய 2 பேரும் விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களது கூட்டாளியான 3வது நபர், தங்க நகைகளுடன் சென்னையில் இருந்து விஜயவாடாவிற்கு ரயிலில் தப்பிச் செல்வதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, ஆந்திராவின் நெல்லூர் அடுத்த பித்தரகண்டா ரயில் நிலையத்தில் 3வது நபரை ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

மேலும் இவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரானி கொள்ளை கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் எனவும், காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டால் பிணையில் வெளியே எடுக்க வக்கீல் தயாராக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், விமான நிலையத்தில் கைதான இருவரை செயின் பறித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

Arrest

அப்போது, தரமணி ரயில் நிலையம் அருகே, ஜாபர் குலாம் ஹூசைன் (26) என்பவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவலர்களை சுட முயன்றதால், தற்காப்புகாக ஜாபர் மீது திருவான்மியூர் காவல் ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிகிறது. இதில், குண்டு துளைத்ததில் பலத்த காயமடைந்த ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தொடர்ந்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், ஏற்கனவே ஜாபர் மீது தாம்பரம் அருகே செயின் பறித்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், பல்வேறு மாநிலங்களிலும் கொள்ளை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதோடு, செயின் பறிப்பு சம்பவத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ஜாபர் இரானி கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. அதாவது, மக்களை திசைத் திருப்பி தொடர் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடுவதுதான் இரானி கும்பலின் பாணியாகும். ஈரானை பூர்வீகமாக கொண்ட இவர்கள், பல்வேறு குழுக்களாகப் பிரிந்து மகாராஷ்டிராவில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பொதுவாகவே வலுவான உடல்வாகு கொண்டவர்கள். பெண்களைக் குறி வைத்து கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடுவதும் இவர்களது பாணி. சென்னையில் நேற்று அடுத்தடுத்து 7 இடங்களில் செயின் பறிப்பில் இந்த இரானி கும்பலே ஈடுபட்டுள்ளது. மேலும் நகைகளை 3வது நபரிடம் கொடுத்துவிட்டு, ஜாபர் மற்றும் சூரஜ் விமானம் மூலம் தப்ப முயன்றபோது பிடிபட்டனர்.

சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நகை கொள்ளையனை சிங்கம் பட பாணியில் காவலர்கள் பிடித்திருக்கின்றனர். அதாவது, சென்னையில் அடுத்தடுத்து நகைகளை பறித்துவிட்டு ஜாபர், சூரஜ் விமான நிலையம் சென்றுள்ளனர். அடையாளம் தெரியாமல் இருக்க சட்டைகளை மாற்றியபோதும், காலணிகளை மாற்றாமல் இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: இன்னும் எதுக்கு கண்ணாமூச்சி? இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு.. அண்ணாமலை சஸ்பென்ஸ் பேச்சு!

எனவே, சூரஜ் சென்னை விமான நிலையத்தில் அடுத்து புறப்படும் விமானம் எதுவோ, அதற்கு டிக்கெட் தாருங்கள் என கேட்டதால் சந்தேகம் அடைந்துள்ளனர் ஊழியர்கள். அவர்கள் அளித்த தகவலின் பேரில், சூரஜை போலீசார் பிடித்து விசாரித்ததில், பெண்கள் அணியும் நகைகளை அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சூரஜ் போர்டிங்கில் இருந்த நிலையில், ஜாபர் விமானத்தில் ஏறி அமர்ந்திருக்கிறார்.

சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்துச் சென்ற இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, சிங்கம் பட பாணியில் விமானத்திற்குள் ஏறி தப்பியோட இருந்த முக்கிய கொள்ளையனான ஜாபரை கைது செய்துள்ளனர். சிஆர்பிஎஃப் போலீசார் இதற்கு உதவினர். மேலும், போர்டிங்கில் விமானம் ஏற காத்திருந்த சூரஜையும், விமானத்தில் அமர்ந்திருந்த ஜாபரையும் கொள்ளை நடந்த 3 மணி நேரத்தில் போலீசார் பிடித்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!