ஒதுக்குப்புறமான வீடு.. ஆடையில்லாமல் இருந்த பெண்கள், ஆண்கள்..! போலீசாரை கண்டு ஓட்டம் பிடித்த இளம்பெண்கள் : 6 பேர் கைது!!

3 July 2021, 2:18 pm
Prostitue 6 Arrest- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கொல்லங்கோடு பகுதியில் உள்ள ஒதுக்குபுறமான வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கேரளா மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி பகுதியை சேர்ந்த ஜெயக்குமாரி என்பவரின் வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருவதாக கொல்லங்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் இன்று மதியம் ஜெயக்குமாரியின் வீட்டிற்கு சோதனையிட சென்ற போது அங்கு அரைகுறை ஆடைகளுடன் படுத்துகிடந்த இளம்வயது பெண்கள் போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடி உள்ளனர்.

உடனே போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது ஜெயக்குமாரி உட்பட 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உடலில் ஆடை ஏதும் இல்லாமல் படுக்கைகளில் கிடந்துள்ளனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்த போது உடலுறுவுக்கு பயன்படுத்திய உறைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் கேரள மாநிலம் பூவார் பகுதியை சேர்ந்த மேரி (வயது 52), மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த கவிதா (வயது 30),பைங்குளம் பருத்தி கடவு பகுதியை சேர்ந்த அஜிகுமார் (வயது 45), பாலராமபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 49) மற்றும் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சுமித் (வயது 49) என்பதும் தெரியவந்தது.

அவர்கள் பணத்திற்காக தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து போலீசார் ஜெயக்குமாரி உட்பட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 384

0

0