ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

14 June 2021, 9:55 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்தவர் குழந்தைகள் திருமண தடை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகம் வடகரை திடீர் நகரை சேர்ந்தவர் செந்தில் மகன் சுதாகர்.20. கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இஸ்லாமிய சிறுமியை கடந்த 11ஆம் தேதி ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று உறவினர் வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் குழந்தைகள் திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்துள்ளனர்.

Views: - 171

1

0