நாங்க எதுக்கு ராமர் கோவிலை இடிக்கணும்.. கலவர அரசியல் செய்யும் பாஜக : செல்வப்பெருந்தகை காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 1:46 pm

நாங்க எதுக்கு ராமர் கோவிலை இடிக்கணும்.. கலவர அரசியல் செய்யும் பாஜக : செல்வப்பெருந்தகை காட்டம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் ஐந்தாம் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது நான்கு கட்ட தேர்தலில் முடிவுகளும் ஒரு அளவுக்கு பாஜகவால் கணிக்கப்பட்டுள்ளது…

ஒவ்வொரு தேர்தல் கட்டத்திலும் பாஜக தலைவருடைய உரை நாளுக்கு நாள் மாறுபடுவதை நாம் காணுகிறோம், தற்போது உச்சபட்சமாக ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிந்தவுடன் நரேந்திர மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் மீண்டும் அதித்திவீர வெறுப்பு அரசியலை செய்ய ஆரம்பித்துள்ளனர்…

புல்டோசர் கதையை பேசுகிறார் அன்பால் போதித்த மகாத்மா காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு இருந்த இந்த நாட்டில் பிரதமராக இருந்து கொண்டு மோடி முன்னுக்குப் பின் முரணாக பேசுவதும் நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டம் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மத அரசியல் சாதிய அரசியல் மொழி அரசியல் இந்த மூன்று அரசியலும் செய்யக்கூடாது என்று தெளிவாக நம்முடைய சட்டங்கள் சொல்கின்றது…

மோடி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்கவில்லை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மதிக்கவில்லை அதற்கு மாறாக தோல்வியடைய போகிறோம் என்று உணர்ந்து உறுதி செய்து தற்போது கலவர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்
தேர்தல் ஆணையம் இதையெல்லாம் ஏன் வேடிக்கை பார்க்கிறது, தேர்தல் ஆணையம் நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும் அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டியது தான் தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையம் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது எல்லோரிடமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது தேர்தல் ஆணையம் யார் வெறுப்பு அரசியல் பேசினாலும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினாலும் சாதி மத அரசியலை கையில் எடுத்து பேசினாலும் அந்த தலைவர்களின் பிரச்சாரத்திற்கு தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்….

ஒவ்வொரு தேர்தல் கட்டத்திலும் பிரதமர் மோடிக்கு பயம் வந்துவட்டது, இங்கு இருப்பவர்கள் கூட ராமர் பக்தர்கள் தான் யார் இடிக்க அனுமதிப்போம், நாங்கள் எல்லோரும் ராமர் கோவிலை இடிப்போமா நாங்கள் நாமமும் போடுவோம் பட்டையும் போடுவோம் எல்லா மதமும் சம்மதம் எம்மதம்….

அரசியலுக்காக முழுமையாக கட்டி முடிக்காமல் ராமர் கோவிலில் பிறந்தார் மோடிக்கான ராமர் கோவில் மக்களுக்கான ராமர் கோவில் கிடையாது, மோடி செய்யும் அரசியலை மக்கள் புரிந்து கொண்டார்கள்….

பிரியங்கா காந்தி ராகுல் சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் போகும் இடம் எல்லாம் பெரும் கூட்டம் மக்களாலை கூடுகிறது இத அனைத்தையும் பார்த்து பயந்து போய் அச்சப்பட்டு நடுங்கி மோடி அவர்கள் இப்படிப்பட்ட மலிவான அரசியலில் ஈடுபட்டு வருகிறார் இடிப்பது காங்கிரஸின் வழக்கம் கிடையாது கட்டுவதுதான் காங்கிரஸ் கட்சியின் வழக்கம், காங்கிரஸ் செய்த கட்டமைப்பை தகர்ப்பதும் இடிப்பதும் பாஜகவின் வேலையாக உள்ளது….

சத்யராஜ் பொறுத்தவரை அவர் ஒரு பகுத்தறிவாளர் ,நடிப்பது அவரது தொழில் அவர் மோடியாக நடித்தால் உண்மையான மோடி யார் என தெரியும் வகையில் நடிக்க வேண்டும்….

மேலும் படிக்க: கேட் போடும் கேரளா.. வருது அடுத்த தடுப்பணை… தூக்கத்தில் இருந்து முழிங்க முதல்வரே : இபிஎஸ் கண்டனம்!

பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக் கல்வியைக் கொண்டு வந்ததை உயர்கல்வியை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வலிமைப்படுத்தினார், பாஜகவை சேர்ந்தவர்கள் கல்வியைப் பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது, தற்போது வரை அவர்கள் குல கல்வி குறித்து பேசி வருகிறார்கள்.

சமூக நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் பெருந்தலைவர் காமராஜர் முத்தமிழர் டாக்டர் கலைஞர் அவர்கள் எல்லோரும் பாடுபட்டுள்ளனர்…

சாதி கலவரம் மொழி கலவரம் இன கலவரம் ஆலய வழிபாடுகளில் பிரச்சனை இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டது உள்ளிட்டவை 10 ஆண்டுகளில் செய்து உள்ளனர்., பெண்களுக்கு எதிரானவர்கள் பாஜகவினர் அவர்கள் மாங்கல்ய சூத்திரத்தை பற்றி பேசுகிறார்கள்….

ஜெயக்குமார் மரணம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறோம் ,பல குழுக்களை அமைத்து விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்,அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்கு நேரம் எடுக்கிறது…

காலம் எடுத்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டறிய வேண்டும் என நாங்களே காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம் .. விசாரணையில் சுணக்கம் என தெரிந்தால் உயர் காவல் அதிகாரிகளை நாங்களே சந்தித்து பேசுவோம் என்றார்…

மோடி பிற்போக்குவாதி பாஜக பிற்போக்கு வாதிகள் பெண்களுக்கு எதிரானவர்கள் மோடியின் ஆட்சியும் பாஜகவினரும் அதனுடைய பேச்சு தான் பேருந்து குறித்து பேசியது….

2014 தேர்தலில் பொருளாதாரத்தில் கட்டமைப்பையும் வல்லரசு நாடுகளுக்கு இணையாக கொண்டு செல்வோம் என்ற கூறினார்…

ஐரோப்பாவில் 60 வயதை கடந்தவர்களுக்கு இலவச பேருந்து இலவச ட்ரெயின் எல்லோருக்கும் வழங்குகிறார்கள் ஏன் மோடியால் அதையெல்லாம் இந்தியாவில் வழங்க முடியவில்லை…. மகளிர் இலவச பேருந்து திட்டம் என்பது மிகப்பெரிய முற்போக்கு திட்டம் இதை போய் குறை சொல்கிறார் என்றால் எப்படி பெண் அடிமையை படைத்து வைத்திருந்தார்களோ இன்னும் நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டி உளளார் இதுதான் ஆர்எஸ்எஸின் சித்தாந்தம் பெண்களுக்கு சம உரிமை சுய உரிமை கிடைக்கக் கூடாது இதுதான் ஆர்எஸ்எஸின் எழுத்துக்களும் சொல்லும் அவர் ஆர்எஸ்எஸின் தொண்டர் ஆர்எஸ்எஸ்ஸின் தொண்டராகத்தான் பேசுவார் பிரதமராக பேச மாட்டார்,

நீங்கள் இன்னும் நான்காம் தேதி வரை தான் இருக்கப் போகிறீர்கள் அதுவரை யாவது மோடி அரசு மெட்ரோவிலும் பெண்களுக்கு இலவச பயணம் வழங்குகிறோம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்….

ஸ்டாலின் ஆட்சி தான் காமராஜரின் ஆட்சி தான் இவிகேஸ் இளங்கோவன் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை…

எங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ அதெல்லாம் காமராஜர் ஆட்சி தான் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியைப் பற்றி புகழ்ந்து பேசினார்….

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!