பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டியை நிறுத்த போர் காரணம் இல்லையா? பிசிசிஐ புது விளக்கம்!
Author: Udayachandran RadhaKrishnan9 May 2025, 10:53 am
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. நேற்று இமச்சல் பிரதேசத்தல் உள்ள தர்மசாலாவில் பஞ்சாப் மற்றும் டெல்லி இடையே போட்டி நடைபெற்றது.
மழை பெய்ததால் டாஸ் போட தாமதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் மழை நின்றதும் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையும் படியுங்க: வீட்டு பெண்களுக்கே துரோகம்.. எப்படி மனசு வருது? பிரபல சூப்பர் மார்கெட் உரிமையாளரின் மகன் கைது!
பஞ்சாப் அணி 10.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்திருந்த போது திடீரென போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. ஜம்து காண்மீரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள், பார்வையாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்ப்டடனர். ஆனால் எதனால் நிறுத்தப்பட்டது என்பது குறித்த காரணத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
Arun Dhumal asking the spectators to leave. The message is clear the situation is even more clear. IPL needs to stop 🛑 #PBKSvsDCpic.twitter.com/ojiX6bYTz8
— Radoo (@Chandan_radoo) May 8, 2025
பஞ்சாப் – டெல்லி போட்டி தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாகவும், போர் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதால், மைதானத்தில் மின் விளக்கு கோபுரம் பழுதடைந்ததே காரணம் என்றும், சிரமத்திற்கு வருந்துகிறோம் என கூறப்பட்டுள்ளது.