படுக்கையறையில் மனைவியுடன் வாலிபர்… ஷாக் ஆன கணவர் : ஊரையே கூட்டி நடத்திய விசித்திர சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2025, 12:37 pm
டெக்னாலஜி அதீத வளர்ச்சி காரணமாக கள்ளக்காதல் சம்பவங்கள் ஒரு பக்கம் பெருகி வருகிறது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் ரூபி என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
மனைவிக்கு பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
விஷயத்தை கேள்விப்பட்ட மனோஜ் தனது மனைவியை கண்டித்துள்ளார். இனி இந்த தவறை செய்ய மாட்டேன், என மன்னிப்பு கேட்ட மனைவி, திருந்தி வாழ்வ்தாக கூறினார்
இருப்பினும் சந்தேகம் தீராத மனோஜ், ஒரு வாரம் வெளியூரில் வேலை இருப்பதாக கூறி சென்றார். இதை தனக்கு சாதகமாக்கிய ரூபி, தனது கள்ளக்காதலனை வரவைத்து கட்டிலில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன், உடனே வீட்டுக்குள் செல்ல, எதிர்பாராத ஜோடி ஷாக் ஆகினர். உடனே அவர்கள் இருந்த அறையை தாழிட்டு பூட்டிய அவர், மனைவி உறவினர்களை வரவைத்தார்.
பின்னர் இனி தன்னால் ரூபியுடன் வாழ முடியாது, அவர் அந்த வாலிபரையே திருமணம் செய்து கொள்ளட்டும், என இருவருக்கும் திருமணம் செய்து வைத்த அவர், இனி என்னுடன் அவருக்கு எந்த உறவும் கிடையாது என எழுதி வாங்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேற்றினார்.
இந்த சம்பவம் அங்குள்ளவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. தவறு செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது புகார் தராமல், இருவருக்கும் திருமணம் செய்து வைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
