கள்ளதொடர்பால் கணவன் கொலை.. இரவு முழுவதும் மனைவி செய்த பகீர் சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan3 July 2025, 4:53 pm
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பவருக்கு 63 வயதாகிறது. இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வரும் நிலையில், மகன் சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். என்எல்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கொளஞ்சியப்பன், பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இதையும் படியுங்க: காரில் கடத்தப்பட்ட 13 வயது சிறுவன்.. காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு : அதிர்ச்சி தகவல்!
இந்த நிலையில் கொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குறிப்பாக கொளஞ்சியப்பன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது பத்மாவதிக்கு தெரியவந்ததில் இருந்து பிரச்சனை வெடித்தது
இப்படி ஒவ்வொருநாளும் சண்டை நீடித்த நிலையில், கணவர் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகாரையும் மனைவி அளித்தார்.
இந்த நிலையில் கணவர் நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, கத்தியை எடுத்து சரமாரியாக கழுத்தை அறுத்து கொலை செய்தார் மனைவி.

அன்று இரவு முழுவதும் கணவனின் சடலத்துடன் தூங்கிய மனைவி, காலை எழுந்தவுடன், தன்னுடைய உறவினருக்கு போன் செய்து, சம்பவத்தை கூறியுள்ளார்.
இதையடுத்தே உறவினர் கொடுத்த தகவல் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பத்மாவதியை கைது செய்து, கணவர் சலடத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.