விஷமாக மாறிய மீன் குழம்பு.. மருமகளை சிக்க வைத்த மாமனார் : உயிரை பறித்த உல்லாசம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2025, 3:59 pm

கடலூரில் கோபாலக்கண்ணன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடலூர் குறிஞ்சிப்பாடி அடுத்த கட்டியங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபாலக்கண்ணன். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

இதையும் படியுங்க: பாஜகவின் கள்ளக்குழந்தை சீமான்.. உறுதி செய்த உரிமை : யாரு சொல்லிருக்காருனு பாருங்க!

சமையல் பணியை செய்யும் கோபலாக்கண்ணன் கோவையில் உள்ள தனியார் கல்லுரியில் சமையலராக உள்ளார்.

இந்த நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு வந்த கோபலக்கண்ணன் அதன் பின்னர் கோவைக்கு வரவில்லை. உள்ளூரில் வேலை பார்த்து வந்த கோலலக்கண்ணன் நேற்று அதிகாலை வாயில் நுரை தள்ளயிபடி உயிரிழந்து கிடந்தார்.

இதைப்பார்த்த அதிர்ச்சயிடைந்த கோபாலக்கண்ணனின் தந்தை ராதாகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது மருமகளுக்கும் எங்கள் உரை சேர்ந்த தேவநாதன் என்பவருக்கும் இடையே தகாத உறவு உள்ளதை என் மகனிடம் கூறினேன்.

அதன் பிறகு என் மகன் கோவைக்கு வேலைக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே வேலை பார்த்து வந்தார். மருமகளின் நடத்தையை கண்காணித்த என் மகன், இடையூறாக இருப்பதாக கருதி மீன் குழம்பில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.

Wife Kills Husband After Know Illegal Relationship

என் மகன் சாவுக்கு காரணமான மருமகள் மற்றும் தேவநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமனார் ராதாகிருஷ்ணன் புகார் கொடுத்தார்.

இதையடுத்து மருமகள் விஜயாவை போலீசார் கைது செய்த நிலையில் தேவநாதனை தேடி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!