மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்… நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் போலீசார்..!!!

Author: Babu Lakshmanan
25 November 2021, 4:32 pm
vellakovil murder - updatenews360
Quick Share

திருப்பூர் : வெள்ளகோவிலில் மனைவியை கணவன் கடப்பாரையால் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (65). இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. பூங்கொடி அருகிலுள்ள நூல் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பூங்கொடி மில் வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடித்து இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த குருநாதன், மனைவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குருநாதன் மகன் விநாயகத்திடம் நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் வாக்குவாதம் நடைபெறுவதாக கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு மகன் விநாயகன் வந்து சமாதானப்படுத்த முற்பட்ட போது, வீட்டில் இருந்த இரும்பு கம்பி (கடப்பாரை) கொண்டு தனது மனைவியை தலையிலும் கை ,கால் என குருசாமி தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். தாக்குதலில் நிலைதடுமாறி கீழே விழுந்து கிடைத்தவரை தூக்க முற்பட்ட போது மூளை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

அவர்களுடைய வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் பூங்கொடி இறந்து கிடந்தார். அவர் அருகில் கடப்பாரை கிடந்தது. குருநாதன் தனது மனைவி பூங்கொடியை கடப்பாரையால் தாக்கி கொன்று விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. காவல் துறையினர் பூங்கொடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து தப்பி ஓடிய குருநாதனை தேடிவருகின்றனர். கடந்த 13 வருடங்களுக்கு முன்பு வீட்டில் ஓலையை வேய்ந்து கொண்டிருந்த போது மேலிருந்து கீழே தவறி விழுந்துவிட்டார். இதனால் பின் தலையில் அடிபட்டு திடீர் திடீர் என வலிப்பு நோய் ஏற்படும் எனவும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் குருசாமி எங்கும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக அதிகமாக மனநலம் பாதித்து மகன் மற்றும் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று இரவு பூங்கொடியை தாக்கியதாக மகன் வெள்ளகோவில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கணவனே மனைவியை கொலை செய்தது வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 192

0

0

Leave a Reply