காட்டு பன்றியால் பறிபோன உயிர்… இருசக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்த உயிரிழப்பு

Author: Babu Lakshmanan
11 May 2022, 11:06 am
Quick Share

கோவை : காட்டுபன்றி குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இன்று காலை வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, திருவள்ளுவர் நகரை அடுத்த நர்சரி பகுதியில் காட்டு பன்றி ஒன்று மலையில் இருந்து கீழே இறங்கி சாலையைக் கடந்து உள்ளது. அப்போது, இவரது வாகனத்தின் மீது உரசி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் தடாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வனத்துறையினர் காட்டு பன்றியை தேடும் பணியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Views: - 415

0

0