லாரியை வழிமறித்த காட்டு யானை : REVERSE-ல் போக்கு காட்டிய காட்சி!!
17 November 2020, 4:14 pmஈரோடு : சத்தியமங்கலம் அருகே லாரியை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொண்டு வருவது வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் பண்ணாரியிலிருந்து மைசூர் செல்லும் சாலையின் குறுக்கே நின்றுகொண்டிருந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று அவ்வழியாக வந்த லாரியை வழிமறித்து நின்றது. அச்சமடைந்த லாரி ஓட்டுனர் மெதுவாக லாரியை முன்நோக்கி செலுத்த யானை பின்னோக்கி நடந்து தலையை ஆட்டியபடியே சென்றது.
பின்னர் யானை மெதுவாக சாலையோரம் சென்ற பிறகு லாரி ஓட்டுநர் விவேகத்துடன் செயல்பட்டு மெதுவாக லாரியை நகர்த்தி தப்பினார். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது