“இது எங்க ஏரியா உள்ள வராதே“ : வாகன ஓட்டிகளை வழிமறித்த காட்டு யானை!!

19 April 2021, 4:32 pm
Sathy Elephant -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் சாலையைக் கடப்பது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆசனூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை அவ்வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

Views: - 57

0

0