சாலையை கடக்க உதவிய வனத்துறையினர்… தும்பிக்கையின் மூலம் சலாம் போட்ட காட்டு யானை ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
9 March 2023, 10:24 am
Quick Share

கோவை : வால்பாறை அருகே சாலையை கடக்க உதவிய வனத்துறையினருக்கு தும்பிக்கையின் மூலம் லால்சலாம் போட்ட ஒற்றைக்காட்டு காட்டு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட தற்பொழுது கோடை வெயில் தாக்கத்தினால் வனப்பகுதி ஒட்டி உள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளில் நீர்நிலைகளை தேடி காட்டு யானைகள் உலா வருகிறது. ஆழியார் அணை, சோலையார் அணை, காடம்பாறை, அப்பர் ஆழியார் பகுதிகளில் நீர் தேடி வருகிறது.

காட்டு யானை கூட்டங்கள் நீர்நிலையில் தண்ணீர் தேடி வருவதால் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வராமல் இருக்க கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வால்பாறை அருகே தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான சாலையை கடக்க முயன்ற ஒற்றைக் காட்டு யானை, சாலையைக் கடக்க வனத்துறையினர் வழி விட்டனர். இதனால் தனியார் எஸ்டேட் தேயிலை தோட்டத்துக்கு சென்ற ஒற்றைக் காட்டு யானை, தும்பிக்கை தூக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினி போன்று ஸ்டைலாக மரியாதை செலுத்தியது.

பின்னர், அங்கிருந்து ஓடிய யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Views: - 137

0

0