மிரட்டிய கபாலி காட்டு யானை… பீதியடைந்த மின்சார ஊழியர்கள் ; சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
28 February 2023, 11:46 am

கோவை ; வால்பாறையில் மின்சார ஊழியர்களை மிரட்டிய கபாலி காட்டு யானை, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.                       

வால்பாறை அருகே உள்ள சாலக்குடி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலைகளில் கடந்த ஒரு மாதமாக வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை கபாலி, பேருந்துகளை மறித்தும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் துரத்துகிறது.

இந்நிலையில் சோலையார் அணை மின்சார வாரிய குடியிருப்பு பகுதிக்கு வந்த கபாலி, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மின்சார ஊழியர்களை மிரட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!