சிறுமுகை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்..! பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!!

16 April 2021, 12:23 pm
Sirumugai Elephants -Updatenews360
Quick Share

கோவை : சிறுமுகை அருகே சாலையூர் என்ற கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிறுமுகை அருகே சாலையூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் இன்று காலை இரண்டு காட்டு யானைகள் புகுந்தன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சாலையூர் கிராமத்திற்கு வந்த வனத்துறையினர் இந்த யானைகள் தண்ணீர் தேடி வந்து ஊருக்குள் தவறுதலாக புகுந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனிடையே பொதுமக்கள் யாரும் யானைகள் மீது கற்களை வீசாமல் இருக்க தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Views: - 32

0

0