தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை பாஜக தலைமை மட்டுமே அறிவிக்கும்: ஹெச்.ராஜா

Author: Udayaraman
8 October 2020, 9:25 pm
Hraja_UpdateNews360
Quick Share

மதுரை: தமிழக தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பாஜக தலைமை மட்டுமே அறிவிக்கும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

மதுரை பாண்டிகோவிலில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா பேசுகையில் “பாஜகவில் நவம்பர் மாதத்திற்கு உள்ளாக பூத் அளவில் கட்டமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுகவின் சீட்டிங் எம்.எல்.ஏ வே திமுகவுக்கு ஆதரவாக இல்லை. திமுகவினர் பாஜகவில் இணைந்து வருவதால் திமுக கலகத்தில் உள்ளது. ஆடு ரெண்டு முட்டி கொண்டால் நரிகளுக்கு சந்தோஷம், அதிமுக தலைமை பிரச்சினைகளை சுமூகமாக பேசி முடித்து கையாண்டுயுள்ளனர்.

மேலும் அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதலமைச்சருக்கு தன்னுடைய வாழ்த்துகள், திமுக மூழ்கும் கப்பலாக மாறி வருகிறது. 2021 ல் திமுக ஆட்சி அமைக்க முடியாது. தமிழக தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பாஜக தலைமை மட்டுமே அறிவிக்கும், ஒரு பிரச்சினையில் ஆளும் கட்சி நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தலாம், உ.பி யில் எதிர்கட்சிகள் அரசியல் நாடகம் ஆடும் யூக்தி என்றார். இதையடுத்து திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்த கேள்விக்கு ஹெச்.ராஜா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Views: - 39

0

0