ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் : அமைச்சர் சி.வி சண்முகம் உறுதி!

30 September 2020, 2:39 pm
CV shanmugam - updatenews360
Quick Share

விழுப்புரம் : தமிழகத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இணைந்து அதிமுக எதிர்வரும் தேர்தல் களத்தை சந்திக்கும் என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. அதில் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து துறை அதிகாரிகளுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவ்வாறு விழுப்புரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறை தீர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீதான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு விழுப்புரம், சிறுவந்தாடு , கோலியனூர் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 865 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகள் விதவைகள் உதவித்தொகை மற்றும் முதியோருக்கான உதவித் தொகையினை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை,உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பெருந்துறை நிலையத்திற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது .அதற்கான பணிகள் விரைந்து எடுக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் ஆக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொண்டார்.

அம்மாவின் ஆட்சி அமைய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வரும் துணை முதல்வரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம் என தெரிவித்துக் கொண்டார். பச்சைக்கலர் வேஷம் போட்டவர் எல்லாம் விவசாய ஆகிவிட முடியுமா, ஏறு தூக்கியவர், இன்று போய் சேற்றை மிதித்தவர் எல்லாம் விவசாயியாகிவிட முடியுமா, உண்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயத்தை செய்து கொண்டு இருப்பவர் தமிழக முதல்வர்.

விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க தான் திமுக விற்கு தெரியும் . நிலத்தையும், வீட்டை அபகரிப்பது தான் திமுகவினர் தொழில் என்றும், நீலிக் கண்ணீர் வடிக்கிறாரா ஸ்டாலின் என்றும் கேள்வி எழுப்பினார். திமுக மீது உள்ள மிக பெரிய 2 ஜி ஊழல் இதுவரை நடைப்பெறாத ஊழல் 2 லட்சம் கோடி ஊழல் செய்து நாட்டையே உலகத்தையே சுரண்டிய குடும்பம், திமுக கருணாநிதி குடும்பம்.

கனிமொழி உட்பட அந்த வழக்கு குறித்து வரும் 5 ம் தேதி முதல் தினம் தோறும் விசாரணை நடத்தப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூறுவார் என்று கேள்வி எழுப்பினார்.