சீமான் ஆஜராகமாட்டாரா? அவருக்கு இதுதான் கடைசி வாய்ப்பு : நாள் குறித்த நீதிமன்றம்!
Author: Udayachandran RadhaKrishnan15 May 2025, 4:14 pm
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாகவும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது, டிஐஜி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல், நீதிபதி விஜயா முன்பு, டிஐஜி வருண்குமார் தனது வழக்கறிஞர் முரளிகிருஷ்ணா உடன் ஆஜரானார். டிஐஜி வருண்குமார் தொடர்ந்து அவதூறு வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்தில் வருண் குமார் ஆஜார் ஆனார்.
சீமான் ஏன் ஆஜாராக வில்லை – நீதிபதி கேள்வி?
கடந்த முறையின் போது முறையாக ஆஜராகுவேன் என்ற என்று கூறி தான் சென்றீர்கள் அப்படி இருக்கையில், இன்று ஆஜராகாமல் இருப்பது ஏன் என சீமான் தரப்பு வழக்கறிஞரிடன் நீதிபதி திருமதி விஜயா கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்க: கோவையில் மீட்கப்பட்ட அழுகிய சடலம்.. இறந்தது கல்லூரி மாணவர் : அதிர்ச்சி தகவல்கள்!
சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் சிறிது நேரம் விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார் மீண்டும் விசாரணை துவங்கியது. டிஐஜி வருண் குமார் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் தனது தரப்பு வாதத்தை நீதிபதி முன் எடுத்து வைத்து இந்த வழக்கிற்காகாக சீமான் குறிப்பிட்டுள்ளவை பதில் தகவல்கள் தொடர்பில்லாமல் உள்ளது.
அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன் என தரப்பு வாதத்தை நிறைவு செய்தார். வழக்கின் விசாரணை வருகிற 21ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
வருண் குமார் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொழுது இன்று கடைசியான வாய்ப்பு சீமான் தரப்புக்கு அளிக்கப்பட்டது.
நீதிபதி இன்று அவர்கள் தரப்பு பதிலை அளிக்க வேண்டுமென கடந்த எட்டாம் தேதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்று சீமான் ஆஜராகவில்லை அவரது வழக்கறிஞர்களும் பதில் அளிக்கவில்லை.
இதனால் நீதிபதி இது கடைசி வாய்ப்பு என குறிப்பிட்டார் மேலும் எங்களது தரப்பு பதில்கள் அனைத்தையும் சாட்சியங்கள் ஆதாரங்களையும் கொடுத்து விட்டோம் அதனை முன் வைத்துள்ளோம் எங்கள் ஆதாரங்களுக்கு அவர்கள் தொடர்பு இல்லாத பதில்களை அளித்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து எங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தோம். சீமான் தரப்பில் இன்று விளக்கம் அளிக்க முடியாது எனவும் மாற்று தேதிதையை தர வேண்டும் எனவும் அவர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது ஒவ்வொரு முறையும் ஏன் விளக்கம் அளிக்க தாமதப்படுத்துகிறீர்கள் என நீதிபதி அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
பின்னர் வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் அன்றைய தினம் சீமான் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்ற அவசியம் கிடையாது ஆனால் அவர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
