நீதிமன்ற நடவடிக்கைக்கும் கூச்சமே இல்லாமல் ஸ்டிக்கர்.. முதலமைச்சர் மீது இபிஎஸ் கடும் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2025, 2:42 pm

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வரவேற்று முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்க: இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 2வது முறையாக வந்த மிரட்டலால் பரபரப்பு!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தான் ஒரு பொம்மை முதலமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறார் திரு.ஸ்டாலின். உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது?

அஇஅதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே?

உங்கள் காவல்துறை நீதியைப் பெற்றுத் தந்ததா? அப்படியென்றால், உங்களுக்கோ,
உங்கள் அரசுக்கோ துளியும் சம்மந்தம் இல்லாமல், அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய SIT விசாரணையை நீங்கள் Influence செய்தீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?

குற்றங்கள் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து நீங்கள் கூறி வந்தும் இத்தனை குற்றங்கள் நடக்கிறது என்றால், நீங்கள் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?

Will stickers be attached to court proceedings too.. EPS attacks CM!

இன்றைய குற்றவாளி உங்கள் திமுக அனுதாபி ஞானசேகரன்! கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே ட்வீட் போடாதீர்கள் என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டேன் ஸ்டாலின் அவர்களே

“SIR”-ஐக் காப்பாற்றும் உங்கள் ஆட்சி சட்டநீதிக்கும் – பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரான ஆட்சி! இந்த ஆட்சி வீழும்! மக்களுக்கான அஇஅதிமுக ஆட்சி அமையும்! அந்த “SIR”-ம், சாருக்கு பின்னால் உள்ள எல்லா சார்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும்!இவ்வாறு X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

  • rajesh passed away before seeing his son marriage கனவு நிறைவேறப்போகும் தருணத்தில் பிரிந்த உயிர்? ராஜேஷ் மகனுக்கு நடக்கவிருந்த சுப நிகழ்ச்சி! ஆனால் கடைசில?
  • Leave a Reply