‘கோவா’ படத்தில் டிடி இருக்காங்களா? அட இத்தனை நாளா இத கவனிக்காம விட்டுட்டோமே!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2022, 5:45 pm
DD in Goa - Updatenews360
Quick Share

கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு முதன் முதலில் இயக்கிய படம் சென்னை 600 028. 2007ல் வெளியான இந்த படம் கிரிக்கெட் மையப்படுத்தி இருந்ததால் ரசிகர்கள் வரவேற்புடன் படம் பயங்கர ஹிட் அடித்தது.

இந்தபடம் பெங்காளியிலும், கன்னடாவிலும், சிங்கள மொழிகளிலும் கூட ரீமேக் ஆனது. அதன் பின் வெங்கட்பிரபுவின் மார்க்கெட் எகிறியது. இதையடுத்து அவர் 2010ல் எடுத்த படம் தான் கோவா. கிராமத்தில் இருந்து அம்மன் நகைகளை திருடி செல்லும் இளைஞர்கள் கோவாவில் தங்குவதும், ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து, அவளை மணம் முடித்து வெளிநாடு செல்லும் லட்சியமாக கொண்டு, வாழும் மூன்று கிராமத்து இளைஞர்களின் கதை.

வெங்கட் பிரபுவின் எழுத்திலும், இயக்கத்திலும் வெளிவந்த தமிழ் காதல் – நகைச்சுவைத் திரைப்படம் வெற்றியாகவே அமைந்தது. இந்த படத்தில் ஜெய், வைபவ், பியா பாஜ்பாய், சம்பத் ராஜ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும்.

இந்த படத்தில் பியா பாஜ்பாய்க்கு சின்னத்திரை புகழ் டிடி தான் டப்பிங் கொடுத்திருப்பார். இது நிறைய பேருக்கு தெரியாத ஒரு கூடுதல் தகவலாகவே இங்கே கூறியிருக்கிறோம்.

Views: - 769

4

0