வில்சன் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது…

22 January 2020, 10:38 pm
UpdateNews360_Wilson
Quick Share

ராமநாதபுரம்: களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ., கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 8-ந் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அப்துல் சமீம் , தவுபிக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து குற்றவாளிகளுக்கு உதவிய உசைன் ஷெரீப் என்பவரையும் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனைக்கு உடந்தையாக இருந்த தேவிபட்டினத்தை சேர்ந்த பிச்சைக்கனி, அமீர் மற்றும் முகமது அலி ஆகிய மூவரை, போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய ஐ.எஸ். அமைப்பு ஆதரவாளர் ஷேக் தாவூத்தை போலீசார் தேடி வருகின்றனர்.