தவெக மாநாடு தடைகளை வெல்லட்டும்… விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய தாய் ஷோபா!!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2025, 11:05 am
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் தளபதி விஜய் அவர்களுக்கு, அவரது தாயார் திருமதி ஷோபா சந்திரசேகர் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பது:”திரையில் உன்னைப் பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் உனது அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்!
வரவிருக்கும் தேர்தல் உனது இமாலய வெற்றியைக் காட்டும்! நீ அரியணை ஏறும் நாள் விரைவில் வரும், அது உனது தொண்டர்களின் திருநாளாக அமையும்! தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்பதை நிரூபி! நேர்மையான தலைவனுக்கு நீயே எடுத்துக்காட்டு!
உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை. உனது வெற்றிக்கு வானமே எல்லை! வாழ்த்துகள், விஜய்! என குறிப்பிட்டுள்ளார்.

இந்த உற்சாகமூட்டும் வாழ்த்துச் செய்தி தவெக தொண்டர்களுக்கு புது உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
